Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிளிநொச்சியில் உள்ள தமிழ்மக்களின் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கையில் சந்திரசிறீ ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் உள்ள அறிவியல் நகர்பகுதியில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கையில் வடமாகாண ஆளுனர் சந்திரசிறி ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் நிர்வாக அலகுகளும் மற்றும் நிறுவனங்களும் அமையப்பெற்ற இடமாக அறிவியல் நகர் காணப்படுகின்றது.

கிளிநொச்சியின் 9 முதன்மை வீதியின் மேற்குபக்கமாக காணப்படும் அறிவியல் நகரில் அன்று தமிழ்மக்களின் ஊடகக்கல்லூரி, பொதுவிளையாட்டு அரங்கம், வானிலைஅவதானிப்பு மையம், கைத்தொழில் நிறுவனங்கள், அங்கவீனம் அற்றவர்களின் நவம் அறிவுக்கூடம் மற்றும் பல்கலைக்கழகங்கள் என்பன இயங்கிக்கொண்டிருந்தும் இயங்குவதற்காக செயற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டும் இருந்தன.

பின்பு சிறீலங்காப்படையினரின் போர் நடவடிக்கை காரணமாக தடைப்பட்டுபோயின. இன்நிலையில் அறிவியல் நகர்பகுதியில் உள்ள 375 ஏக்கர் நிலப்பரப்பினை சந்திரசிறி அபகரித்துள்ளதாகவும் இதில் வடமாகாண அலுவலகம் இயங்கப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to கிளிநொச்சியில் உள்ள தமிழ்மக்களின் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கையில்: சந்திரசிறீ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com