எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியுடன் இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை நிறைவுக்கு வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் புதிய நிபந்தனையை விதித்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ள நிபுணர் குழுவுக்கு இலங்கை அரசாங்கம் தமது முழுமை ஒத்துழைப்பை வழங்கவேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
அனைத்து சமூகமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்படவேண்டும் என அவர் கோரியுள்ளார்.
ஏற்கனவே, ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை, தொடர்பில், மனித உரிமைகள் குறித்த எழுத்துமூல உறுதிமொழியை தருமாறு இலங்கையிடம் ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனையை விதித்திருந்தது. எனினும் ஸ்ரீலங்கா இதனை நிராகரித்திருந்தது.
இந்தநிலையில், தாம் இலங்கை அரசாங்கத்துடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த முயன்றபோதும் தொடர்புகள் கிடைக்கவில்லை என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் பேனாட் செவேஜ் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை நிறைவுக்கு வரும் நிலையில் அதனை நீடிக்கும் எண்ணம் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், அது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றார் பேனாட் செவேஜ்.



0 Responses to ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நீடிப்பு தீர்மானம் எடுக்கப்படவில்லை? ஐரோப்பிய ஒன்றியம்