Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வேலணை அரசினர் வைத்தியசாலையில் கடமையாற்றிய குடும்பநல உத்தியோகத்தரின் மர்ம மரணத்தையடுத்து வேலணை வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியாக இருந்த டாக்டர் பிரியந்த செனவிரட்ன மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் மருத்துவ மாது சடலமாக மீட்கப்பட்டதையடுத்து டாக்டர் செனவிரட்ன அங்கிருந்து வெளியேறியிருந்தார். சங்கானை வைத்தியசாலைக்கு அவர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்ட போதிலும் அதற்கு சங்கானை வைத்திய சாலைப் பணியாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து அவர் மந்திகை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

டாக்டர் செனவிரட்னவை மந்திகை வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டமைக்கு வைத்தியசாலைப் பணியாளர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க ஆயத்தமானபோது, அவர் பாதுகாப்பாகத் தங்குவதற்காகவே இங்கு அனுப்பப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் கூறி,நிலைமையை சமாளித்ததாக தெரியவருகிறது.

தற்போது டாக்டர் செனவிரட்ன மந்திகை வைத்தியசாலை விடுதியில் தனி அறை ஒன்றில் தங்கியுள்ளார். அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

0 Responses to தர்ஷிகாவின் மர்ம மரணம்: சிங்கள வைத்தியர் மந்திகைக்கு இடமாற்றம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com