Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

.நா. சபையையே எதிர்க்கிற இலங்கை அரசின் தூதரங்களை இந்தியாவில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். சென்னையில் உள்ள தூதரகத்தையும் உடனே அகற்ற வேண்டும். மத்திய அரசு இதை அப்புறப்படுத்தாவிட்டால் பொது மக்களை திரட்டி இலங்கை தூதரகத்தை இழுத்து மூடுவோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆவேசமாக பேசினார்.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் இலங்கை அரசை கண்டித்தும் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை அகற்ற வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன்:

தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காமல் கண்மூடித்தனமாக சிங்கள அரசை ஆதரிக்கிறது நம் மத்திய அரசு. சீனாவை காட்டி மிரட்டி பணிய வைத்துக்கொண்டிருக்கிறது சிங்கள அரசு.
இப்படிப்பட்ட சிங்கள அரசின் ராஜபக்சவைத்தான் தமிழீழ மக்களின் இரத்தத்தால் உருவாக்கப்பட்ட சிவப்புக்கம்பளத்தால் வரவேற்றது இந்திய அரசு,

மனித உரிமை மீறல்களை விசாரிக்க அமைக்கப்பட் மூவர் குழுவை கொழும்பில் இறங்க விடமாட்டேன் என .நா.பேரவையின் அலுவலகத்தை மூடிய ராஜபக்சவிற்கு எந்த அளவிற்கு நெஞ்சழுத்தம் இருக்கும்.

சர்வதேச சமூகத்தை அவமதித்த ராஜபக்சவின் இந்த செயல் இந்தியாவையும் சேர்த்து அவமதித்ததாகத்தானே அமையும். இந்த அவமதிப்பையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது நம் இந்திய அரசு.

இந்த அநாகரீக போக்கை கண்டிக்க வேண்டாமா? இந்திய அரசு.

ராஜபக்ச டெல்லி வந்த போது 7 ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக தெரிகிறது. அந்த ஒப்பந்தங்கள் போடப்பட்ட போது தமீழீழ மக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்களா? அல்லது ஒட்டு தமிழக தமிழ் மக்களின் தலைவர் முதல்வர் அவர்களை கலந்தாலோசித்தார்களா? இல்லை.

எனவே, இனி வரும் காலங்களிலாவது இந்திய அரசு இலங்கை தமிழர்களின் பிரச்சனைகள் சம்மந்தமாக எந்த முடிவெடுப்பதாக இருந்தாலும் தமிழக முதல்வர் அவர்களை கலந்தாலோசித்தப் பின் தான் முடிவெடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

மற்றும் இலங்கையில் .நா.சபை அலுவலகம் இழுத்து மூடுவதற்கும் மனித உரிமை மீறல்களை ஆராய அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழுவை அனுமதிக்க கூடாது என்றும் இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

.நா. சபையையே எதிர்க்கிற இலங்கை அரசின் தூதரங்களை இந்தியாவில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். சென்னையில் உள்ள தூதரகத்தையும் உடனே அகற்ற வேண்டும். இந்த கண்டன ஆர்ப்பட்டம் மூலமும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம்.

மத்திய அரசு இதை அப்புறப்படுத்தாவிட்டால் பொது மக்களை திரட்டி இலங்கை தூதரகத்தை இழுத்து மூடுவோம் என்றார் தொல். திருமாவளவன் பேசினார்.

0 Responses to இலங்கை தூதரகத்தை இழுத்து மூடுவோம்: கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com