பயங்கரவாதியான ஜெனரல் சரத் பொன்சேகாவை உயிருடன் புதைப்பதற்கு மயானம் தேவை என்று பிரதியமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற குழு நிலை விவாதத்தில் பங்கு கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
உரையை பாடலுடன் ஆரம்பித்த மேர்வின் சில்வா நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரத் பொன்சேகா மற்றும் மங்கள சமரவீர ஆகியோரின் உரைகளுக்கு பதலளித்து கடுமையாக உரையாற்றினார்.
பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டில் இலட்சினை கழற்றப்பட்டவர் பொன்சேகா பின்னர் அவரின் சாஸ்திரம் நன்றாக இருந்தமையால் மீண்டும் பதவி கிடைத்தது.
அவருக்குத் தேவையானதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பெற்றுக் கொடுத்துள்ளார்.
மதிப்பு மிக்க ஜனாதிபதியை அவர் தூற்றுகின்றார்
அவரை உயிருடன் புதைப்பதற்கான மயானத்தை அமைக்க வேண்டும். அமெரிக்காவில் இவ்வாறானதொரு மயானம் இருக்கின்றது.
அதேபோல மங்கள சமரவீர கூறுவதைப் போல பான் கீ மூனுக்கு அஞ்சி முழந்தாளிட்டு செயற்பட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



0 Responses to பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டில் இலட்சினை கழற்றப்பட்டவர் பொன்சேகா: மேர்வின்!