Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐரோப்பிய நாடுகளுக்கு ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்வதற்காக இலங்கைக்கு வழங்கப்பட்ட ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி முதல் தற்காலிகமாக இரத்துச் செய்துள்ளது.

இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றிலேயே இந்தத் தகவலை அது வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை வழங்குவதில்லை என்ற முடிபை ஐரோப்பிய ஒன்றியம் நேற்று உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.

பெல்ஜியத்தின் தலைநகர் பிறசில்சில் இருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் விதித்த 15 நிபந்தனைகளுக்கு இணங்குவதாக இலங்கை உத்தி யோகபூர்வமாக எழுத்தில் கடிதத்தை வழங்க வேண்டும் என விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு இலங்கை எந்தவிதமான பொறுப்பு மிக்க பதிலையும் வழங்கத் தவறியதன் காரணமாக இந்த வரிச் சலுகை இரத்துச் செய் யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஐரோப்பிய நாடுகளுக்கு ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்வதற்காக இலங் கைக்கு வழங்கப்பட்ட ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் தற்காலிகமாக இரத்துச் செய்துள்ளது.

இந்த வரிச் சலுகையைத் தற்காலிகமாக இரத்துச் செய்வதற்கான முடிபை முதற்கட்ட மாகக் கடந்த பெப்ரவரி மாதத்தில் ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் எடுத்திருந்தனர்.

சர்வதேச மட்டத்திலான மூன்று மனித உரிமை நடைமுறைகளை அமுல்படுத்துவ தில் காணப்பட்ட குறைபாடுகள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் ஜூன் மாதத்திலிருந்து மேலும் ஆறு மாதங்களுக்கு ஐரோப்பிய கவுன்சிலின் முடிபை அமுல்படுத் துவதைப் பிற்போடுவதற்கான வாய்ப்பு ஒன் றை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியிருந்தது.

அதற்குப் பதிலாக பல முக்கிய விடயங் களில் வெளிப்படையாகத் தெரியக் கூடிய, நீடித்திருக்கக் கூடிய நடவடிக்கைகளை இலங் கை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவுறுத்தியிருந்தது.

எனினும் இலங்கை அரசாங்கத்திடமி ருந்து இந்த மாதம் ஜூலை முதலாம் திகதிக்கு முன்பாக பதில் எதுவும் கிடைக்காமையினால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையைத் தற்காலிகமாக இரத்துச் செய்வதற்கான தமது முடிபை பிற்போட முடியாத நிலையில் தாம் இருப்ப தாக ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பாக அதன் வதிவிடப் பிரதிநிதியும் பிறசில்ஸ்சிற்கான தூதுவருமான றவீநாத் ஆரியசிங்க கடுமையான அறிக்கை ஒன்றை அண்மையில் விடுத்திருந்ததும் வெளிவிகார அமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவை அந்தஸ் துள்ள அமைச்சர்கள் பலரும் மிகக் கடுமை யான தொனியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது வார்த்தைப் பிரயோகங்களை மேற் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

ஜி.எஸ்.பி. சலுகையைக் கோருவது, ஊனம் குணமடைந்ததன் பின்னர் ஊன்று கோலைப் பயன்படுத்துவதற்கு நிகரானது எனப் பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டத்தைத் தொடர்ச்சியாக அனுபவிக்க முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். சலுகைத் திட்டத்தை இழப்பதற்குத் தயாராக வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட காலத்தில் உதவியாக ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட் டம் கிடைக்கப் பெற்றதாகவும் இதனைத் தொடர்ந்தும் எதிர்பார்ப்பது நியாயமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊனமுற்றவர்கள் பூரண குணமடைந்த தன் பின்னர் தொடர்ந்தும் ஊன்று கோல்களைக் கோருவதில் அர்த்தமில்லை எனப் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

0 Responses to இலங்கை அரசின் செருக்கினால் கைநழுவிப் போனது ஜி.எஸ்.பி. பிளஸ்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com