ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின் நிதியில் திருகோணமலையில் இயங்கி வந்த சர்வதேச குடியேற்ற அலுவலகம் இன்று மூடப்பட்டு விட்டது.இதைத் தொடர்ந்து நடத்துவதற்கு உரிய நிதி வசதி இல்லாமல் இருப்பதே இம்மூடுவிழாவுக்கான காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய யுத்தமற்ற சூழலில் இந்த அலுவலகத்தின் செயற்பாடுகள் குறைந்து விட்டதால் இதைத் தொடர்ந்து நடத்துவதற்கான நிதியை வழங்குவதில்லை என்கிற தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உயர்ஸ்தானிகராலயம் எடுத்திருக்கின்றது.
இந்த அலுவலகத்தில் கடமையாற்றி வந்தவர்கள் நாட்டில் வேறு மாவட்டங்களில் செயற்படுகின்ற சர்வதேச குடியேற்ற அலுவலகங்களில் தொடர்ந்தும் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த அலுவலகத்தின் 17 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர் என்றும் அவர்கள் வவுனியா,மன்னார்,கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள் என்றும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to திருகோணமலையில் இயங்கிவந்த ஐ.நா அலுவலகத்துக்கு மூடுவிழா!