ஐக்கிய நாடுகள் சபையின் மூன்று பேரைக்கொண்ட நிபுணர் குழுவை சந்திக்க தாம் பயப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவ தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.வரவுசெலவுத்திட்டம் மீதான நாடாளுமன்றத்தில் குழு நிலை விவாதம் இன்று நடைபெற்ற போது உரையாற்றிய அவர், இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தினர் மீது சர்வதேசத்துக்கு ஏற்பட்டுள்ள சந்தேகத்தை போக்குவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து இறுதி வரையில், எந்த சர்வதேச சட்டமும் மீறப்படவில்லை எனவும் அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த உரை சரத் பொன்சேகா பொன்சேகாவினால் நிகழ்த்தப்பட்டதன் பின்னர், நாடாளுமன்ற ஹன்சாட் பதிவில் இருந்து அவரது உரை நீக்கப்பட்டுள்ளது.



0 Responses to ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவை சந்திக்க தாம் பயப்படவில்லை: சரத்