இலங்கைக்கான ஜி.ஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ரத்து செய்வதென ஐரோப்பிய ஒன்றியம் இன்று முடிவு செய்துள்ளது.மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை சரியான முறையில் பதிலளிக்கத் தவறியமையே இதற்கான காரணம் என ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் விதித்த நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்தமை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வரிச் சலுகைத் திட்ட நீடிப்பு தொடர்பில் பதிலளிக்குமாறு விடுத்த கோரிக்கைகள் தொடர்பில் இலங்கை அமைதியைப் பேணி வந்தமை வருத்தமளிப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கருத்துக்களை இலங்கை அரசாங்கம் நல்ல எண்ணத்துடன் ஏற்றுக்கொள்ளத் தவறியுள்ளதாக ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், வரிச் சலுகைத் திட்டத்தை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தைகளை தொடர முடியும் என ஒன்றியம் அறிவித்துள்ளது.



0 Responses to இலங்கைக்கான ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகை ஆகஸ்ட் முதல் ரத்து