Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கரும்புலிகள் கதை கேளு
மரணமெல்லாம் தூசி பாரு,
ரத்தம் சொட்டிய மண்ணெடுத்து
அவர்கள் உயிர்வாசம் நுகர்ந்து பாரு;

கரும்புலிகள் உதிரம் பூத்து
கடல்கூட அழுது சிவந்தது பாரு -
உயிரும் வருடமும் பலிகொடுத்தும்
ஈழம் மட்டும்இலங்கையாச்சி பாரு;

மில்லர் போல பலபேரின்
இலட்சியக் கனவு சாமாதியில் பாரு -
கமலுக்காக ஒரு பெண்ணின்
கட்டாத தாலி விதவையாச்சி பாரு;

அங்கையர்கன்னி வரலாறெல்லாம்
கடலெழுதிக் கொண்டது பாரு -
பெண்கள் செய்த சாகசங்கள்கூட
வெற்றிகொண்ட மரணமாச்சி பாரு;

காந்தரூபன், கொலின்ஸ், டாம்போவின் இறப்பெல்லாம்
விடுதலையின் வேட்கை பாரு -
உயிர்கள்; பல கொடுத்துகாத்த ஈழம்
முள்ளிவாய்க்காலோடு மௌனமாச்சி பாரு;

ஒன்றா இரண்டா உயிர்கொடுமை
எல்லாம் -
ஈழமண்ணின் வீரம் பாரு -
விட்ட உயிர்கள் முளைத்தொரு நாள்
எங்கள் தேசம் வெல்லும்; உறுதி பாரு;

கரும்புலிகள் கதை படித்தால்
செத்த -
பிணம் கூட வீரங் கொள்ளும் பாரு;
கரு விதைத்த கரும்புலிகளின்
சமாதி கூட பாடம் புகட்டுது பாரு!!

வித்யாசாகர்.

0 Responses to கேட்ட கதையும்; கேட்காத பாடமும்: கரும்புலிகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com