Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவங்ஸ தலைமையிலான ஆதரவாளர்கள் கொழும்பிலுள்ள .நா. அலுவலகத்தக்கு முன்பாக நேற்று முதல் ஆர்ப்பாட்டங்களை ஆரம்பித்துள்ளதால் .நா.வின் கொழும்பு அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த அறிவிப்பை நியூயோர்க்கிலுள்ள .நா. தலைமையகம் தனது கொழும்பு அலுவலகத்துக்கு விடுத்துள்ளதாக தெரியவருகிறது. .நா. தலைமையகம் சிறிலங்கா அரசுடன் பேச்சு நடத்தி, தனது கொழும்பு அலுவலக பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும்வரை, அலுவலக பணியாளர்கள் தத்தமது வீடுகளிலிருந்து அலுவலக வேலைகளை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, தனது அலுவலகத்துக்கும் அலுவலக பணியாளர்களுக்கும் நேற்று இடம்பெற்ற அச்சுறுத்தல் குறித்து மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவை குறித்து தாம் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் பேச்சு நடத்திவருவதாகவும் .நா. தலைமையகம் தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள .நா. அலுவலகம் எவ்வளவு நாட்கள் மூடப்படும் என்பது தொடர்பாக உடனடியாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

0 Responses to கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com