தமிழீழ விடுதலைப்புலிகளை யுத்தத்தில் வென்றதன் மூலம் இலங்கை சர்வதேசத்தின் முன் கம்பீரமாக நிற்கின்றது என்று மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல்துறை அமைச் சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.கண்டி சுவிஸ் விருந்தகத்தில் ஊடகவியலாளர்களுக்கென விசேட செயலமர்வு ஒன்று நேற்று இடம்பெற்றது. மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் அமைச்சு, அரச தகவல் திணைக்களம் ஆகியன இச்செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தன. போருக்குப் பின்னரான சர்வதேச சவால்கள், மக்கள் சபையின் மூலமாக மக்களின் பங்களிப்பைக் கட்டியயழுப்புதல் ஆகிய தலைப்புக்களில் இங்கு விரிவுரைகள் இடம் பெற்றன.
இந் நிகழ்வில் அரச தகவல் திணைக்களத்தின் பிரதம பணிப்பாளர் பேராசிரியர் ஆரியரட்ன அத்துகல, மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யூ.பி.கணேகல, பேராசிரியர் லக்ஸ்ரீ பெர்னாண்டோ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பிரதம பணிப்பாளர் தம்ம திசாநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டு கருத்துரைகள் வழங்கினர்.இச்செயலமர்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு,
உலகத்தின் மிகவும் கொடிய பயங்கரமான பயங்கரவாதிகள் என்று கருதப்பட்டவர்களுடனான யுத்தத்தில் நாம் இன்று வெற்றி பெற்றுள்ளோம். எமது நாட்டு மக்களின் 30 வருட காலக் கனவை நனவாக்கி உள்ளோம்.இன்று நாம் உலகத்தின் முன்பு கம்பீரமாக நிற்கின்றோம். யுத்தத்தின் மூலம் பயங்கரவாதத்தை வெற்றி கொண்ட நாம் சகல தரப்பினரின் ஒத்துழைப்புடன் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியயழுப்ப வேண்டும். இதுவே இன்றைய முக்கிய பணியாகும்.
யுத்தத்தை வெற்றி கொண்ட எமது நாட்டின் தலைமைத்துவம் இந்த நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காகவும் முன்னின்று செயற்படும். இதற்காக ஊடகவியலாளர்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும். இந்த நாட்டின் ஊடகத்துறையின் வளர்ச்சிக்காக எதிர்காலத்தில் பல்வேறு திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம்.
ஊடகவியலாளர்கள் எனது நண்பர்கள். எனவே அவர்களின் தேவையறிந்து சேவை செய்வதற்கும் நான் நடவடிக்கைகளை மேற் கொள்ளுவேன். ஊடக அபிவிருத்தி அதிகாரசபை ஒன்றை அமைக்கவுள்ளேன் என்றார்.



0 Responses to புலிகளை வென்றதன் மூலம் சிறிலங்காவுக்கு தனி மரியாதை கிடைத்துள்ளதாம்