இதுதொடர்பாக இந்த அமைப்புகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் துண்டு பிரசுரங்களாக வெளியிடப்பட்டன.
அதில்:
தமிழின அழிப்பில் ஈடுபட்டுள்ள சிங்கள அரசின் விளம்பரதாரியாக அசின் மாறியுள்ளார்.
இலங்கையில் படப்பிடிப்புக்கு சென்றது மட்டுமல்லாமல் முள்வேலியில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை ராஜபக்சே மனைவியுடன் சென்று சந்தித்து சிங்கள அரசை உயர்வானதாக சித்தரித்து உள்ளார்.
தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட அசின் ராஜபக்சே அரசை பெருந்தன்மை கொண்டது போல் காட்ட முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.
அசினுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டியது அவசியம். அவர் விளம்பரப்படுத்திய பொருட்களையெல்லாம் பயன்படுத்தாமல் புறக்கணிக்க வேண்டும்.
தமிழ் திரையுலகமும் அசினை ஒதுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 Responses to சிங்கள அரசின் விளம்பரதாரியாகி விட்டார் அசின்: தமிழின பாதுகாப்பு கூட்டமைப்பு