ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தின் முன்னாள் நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் பிரதமர் நாடாளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி இன்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தது.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவம் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்று உடனடியாக தெரியப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற போது உலக சுகாதார அமைப்பு, ஐக்கிய நாடுகளின் சிறுவர் அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் ஐக்கிய நாடுகளின் கொழும்பு அலுவலகத்தில் இருந்ததாக சுட்டிக்காட்டியுள்ள அவர், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான சம்பவங்கள் மூலம் நாட்டிற்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.



0 Responses to ஐ.நா. சபைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?: ரணில்