சென்னையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான சக்திகளினதும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் தமிழ் அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு குழுக்களினதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் சென்னை இலங்கை தூதுவராலயத்திற்கு தமிழ் நாடு அரசாங்கம் பாதுகாப்பு வழங்கியுள்ளது.இறுதியாக இலங்கைத் தூதுவராலயத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலில், இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது நடத்திவரும் தாக்குதல்கள் காரணமாக சென்னையிலுள்ள இலங்கை பிரதி தூதுவரின் அலுவலகத்தை மூடிவிடுவோம் என்று தமிழ்நாடு அரசியல் கட்சி ஒன்று தெரிவித்திருந்தது.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டை இலங்கைக் கடற்படையினர் வன்மையாக மறுத்துள்ளனர்.
இதேவேளை, சென்னையிலுள்ள இலங்கைத் தூதுவர் வி. கிருஸ்ணமூர்த்தி கொழும்பிலுள்ள ஆங்கிய இணையத்தளம் ஒன்றிற்கு கருத்துத் தெரிவிக்கையில்,
தமிழ் நாட்டுக்கு வந்திருந்த இலங்கை அகதிகள் இலங்கையில் யுத்தம் முடிவடைந்ததை அடுத்து தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர் என்று கூறினார்.
அகதிகளை திருப்பி அனுப்ப இதுவரை திட்டமிடப்பட்ட நடைமுறை எதுவும் இல்லாத போதிலும் பெரும் தொகையான அகதிகள் தாமாகவே விரும்பி இலங்கை சென்றுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



0 Responses to விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகளால் ஆபத்தாம்; இலங்கைத் தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!