இக் குழு இன்னும் சில மாதங்களில் செயற்படத் தொடங்கவுள்ளது. இலங்கை அர சின் இனப்படுகொலை நடவடிக்கைகளுக்கான ஆதாரங்களைத் திரட்டும் பணியில் இது முதலில் ஈடுபடும். திரட்டப்படும் ஆதாரங்களை வைத்து ஐ.நா. மனித உரிமைகள் சபையில் வழக்குத் தாக்கல் செய்யப்படுவதுடன் இந்த ஆதாரங்கள் ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என்று பேராசிரியர் இராமசாமி தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர்களை வகைதொகையின்றி படுகொலை செய்து குவித்த இலங்கை, இந்தியத் தலைவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கட்டாயம் தண்டிக்கப்பட வேண் டும் என்றும் எங்கெல்லாம் மனித உரிமை கள் மீறப்படுகின்றதோ அங்கெங்கும் எல்லாம் பாதிக்கப்பட்ட தரப்பினர்களுக்காக இச் சர்வதேச குழு தவறாது குரல் கொடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to தமிழின படுகொலைகள்: சர்வதேச குழு அமைத்து ஐ.நா.வில் வழக்கு தாக்கல் செய்கிறார் மலேசிய பினாங்கு மாநில துணை முதல்வர்