நேற்று புதன் கிழமையன்று யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ள 240 பெண்களும் 60 ஆண்கள் மற்றும் 50 சிறுவர்களாகியோர் தற்போது யாழ் புகைரத நிலையத்தில் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.
தாங்கள் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்களெனவும் அதற்கான ஆவணங்களாக அடையாள அட்டை மற்றும் பிறப்பு திருமணச்சான்றிதழ்களைத்தாம் வைத்திருப்பதாக கூறுகின்றனர்.
இத்தோடு மணியந்தோட்டம் போன்ற இடங்களில் காணிகள் இருந்தன அவற்றில் தற்போது தமிழ் மக்கள் தங்கியுள்ளனர். எனவே அவை எமக்குத் தேவையில்லை. ஆனால் யாழ். மாவட்டத்திற்குள் எம்மை மீள்குடியேற்றம் செய்யவேண்டும் எனக்கேட்டுள்ளனர்.
விரைவாக எம்மை மீள்குடியேற்றம் செய்வதற்கான கோரிக்கைகளை இங்குள்ள அரசியல் வாதிகள் மற்றும் இராணுவ பொலிஸ் அதிகாரிகளிடம் கேட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.






0 Responses to மீள்குடியேற்றத்திக்காக யாழ்ப்பாணம் வந்துள்ள 350 சிங்கள மக்கள்!