Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நீண்ட நாட்களுக்கு பின்னர் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட அகதிகள் படகு ஒன்று நேற்றைய தினம் இந்தோனேசிய கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டுள்ளது.

அதில் இருந்த 87 இலங்கையர்களை அவர்கள் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி இலங்கையில் இருந்து அகதிகளாக அவுஸ்திரேலியா செல்லும் தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

எனினும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் கப்பலில் ஏற்பட்ட எரிபொருள் மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து இந்தோனிய கடற்பரப்பில் நிர்கதியாக இருந்துள்ளது.

இதனை அடுத்து இந்தோனேசிய கடற்படையினர் அதனை மீட்டுள்ளனர்.

பின்னர் கப்பலில் இருந்து 87 பேரையும் மெரேக் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.






மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to மீண்டும் இந்தோனேசியாவில் இலங்கை அகதிக் கப்பல் - 87 பேர் மீட்பு (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com