ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவுக்கு சிறைக்குள் வைத்து திட்டமிட்ட ரீதியிலான ஆபத்துக்கள் நேரலாம் என்று திருமதி அனோமா பொன்சேகா அச்சம் தெரிவித்துள்ளார்.கைது செய்யப்படும் பாதாள உலகக்கும்பல்களைச் சேர்ந்தவர்களை சட்டத்திற்குப் புறம்பான வகையில் பொலிஸார் மூலம் படுகொலை செய்வித்துவிட்டு, பொலிஸ் காவலிலிருந்த போது தப்பியோட முற்பட்ட வேளையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக அரசாங்கம் சமாளித்து விடுவதை திருமதி அனோமா பொன்சேகா உதாரணமாக சுட்டிக் காட்டுகின்றார்.
அது போல சிறைக்குள் வைத்து கலகம் விளைவிக்க முயன்றார், அல்லது துப்பாக்கியொன்றைப் பறித்தெடுக்க முயன்றார் என்பன போன்ற போலியான குற்றச்சாட்டொன்றை முன்வைத்து சரத் பொன்சேகாவின் உயிருக்கு ஊறு விளைவிக்கும் நடவடிக்கையொன்றில் அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளக் கூடும் என்பதாக அவர் மேலும் அச்சம் தெரிவிக்கின்றார்.
அல்லது இயற்கை மரணம் என்று காட்டக்கூடிய வகையில் சூழலை ஏற்படுத்தி சரத் பொன்சேகாவை தானாகவே சாவைத் தேடிக்கொள்ள வைக்கும் முயற்சியில் கூட அரசாங்கம் ஈடுபடலாம் என்பதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.
ஆனாலும் எவ்வகையான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் சரத் பொன்சேக்கா முன்னெடுத்த ஜனநாயகத்துக்கான போராட்டம் இடைவிடாது தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே நாளை நியூயோர்க்கில் சரத் பொன்சேகாவின் புதல்வி அப்சரா தலைமையில் பொன்சேகாவின் விடுதலை வேண்டி பௌத்த யாகமொன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to பொன்சேகாவுக்கு சிறையில் வைத்து ஆபத்து நேரலாம்? அனோமா