Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நெதர்லாந்து நாட்டில் அமையவிருக்கும்; மக்களவைக்கு இத்தாலி ஈழத்தமிழர் மக்களவையினர் தமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர். தமிழ் மக்கள் கூடும் நிகழ்வுகளின் இறுதியில் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்று கூறி முடிப்பது வழக்கம். இருப்பினும் இதனைக் கூறும் நாம் அனைவரும் எங்களின் தாகத்தினை அடைவதற்கு என்ன செய்கின்றோம்?…

என்பதை நாமே எமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும். தமிழரின் தாகம் ஒவ்வொரு கால கட்டத்திலும் என்னற்ற உயிர் தியாகங்களுடனும், அற்பணிப்புக்களுடனும் வலுப் பெற்று வந்துள்ளது. புலம் பெயர் தேசத்தில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களாகிய நாம் ஒரு போதும் வலு நிலையினை கீழ் நோக்கி நகர்த்தாது அதன் சம நிலை தன்மையினை பேணி மேல் நோக்கி நகர்த்த வேண்டும் அத்துடன் தமிழீழத்தை தலை மேல் சுமந்து வந்தவர்களை ஒவ்வொரு கனமும் நெஞ்சில் நிறுத்தி எம் தாயகத்தின் விடுதலை பணியினை முன்னெடுப்பது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

வலுச்சம நிலையினை பேணி அதனை மேல் நோக்கி நகர்த்தும் பணி இன்று புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் கைகளில் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அவ்வகையில் புலம் பெயர் தேசத்தில் வாழும் தமிழ் மக்களாகிய எமக்குள்ள ஒரே தெரிவு அகிம்சை வழி முறையிலான அரசியல் போராட்டமே, இப் போராட்டத்தினை நெறிப்படுத்தி கட்டமைப்பு ரிதீயாக கொண்டு செல்லும் ஒரு பெரும் பணி மக்களவையிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

இவ் மக்களவையானது அந்தந்த நாட்டு சட்ட திட்டங்களுக்கு அமைய தன் பணிகளை முன்னெடுத்துச் செல்லும். எனவே நெதர்லாந்தில் வாழும் தமிழ் மக்களால் உருவாக்கம் பெறவிருக்கும் மக்களவைக்கு செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் எம் தேசத்தின் விடுதலையினை கூறி நிற்க்கும்.

இதில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் தமழீழத்தை நேசிப்பவர்களாகவும், அற்பணிப்பு கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது இத்தாலி ஈழத்தமிழர் மக்களவையினரின் விருப்பமாகும்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to நெதர்லாந்து நாட்டில் அமையவிருக்கும் மக்களவைக்கு இத்தாலி ஈழத்தமிழர் மக்களவையின் வாழ்த்துச் செய்தி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com