Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்களின் பிரச்சினைகள், அரசியல் தீர்வு என்பன குறித்து எந்தத் தரப்பு அழைப்பு விடுத்தாலும் அவர்களுடனான ஆரோக்கியமான கலந்துரையாடலுக்கு தமிழத் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே இருப்பதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கமாக இருந்தாலென்ன, தமிழ்க்கட்சிகளை ஒன்றிணைத்து அமைக்கப்பட்டுள்ள தமிழ்க்கட்சிகளின் அரங்கமாக இருந்தாலென்ன, தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக நாம் எவருடனும் பேச்சுவார்த்தைக்குச் செல்லத் தயார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே அதிகாரப் பகிர்வு தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நவம்பர் மாதமளவில் அரசாங்கத்திடமிருந்து மீண்டும் அழைப்பு விடுக்கப்படும் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவிக்கின்றது.

அதற்கு மேலதிகமாக தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் தீர்வு தொடர்பாக மேற்கொள்ளப்படவுள்ள கலந்துரையாடலிலும் பங்கு கொள்ளுமாறு அதன் முக்கியஸ்தர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நேரடியான அழைப்பு விடுக்கவுள்ளதாக அண்மையில் தெரிவித்திருந்தனர்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக எந்தத் தரப்புடனும் பேசத் தயார்: சம்பந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com