Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ரொறன்ரோ மாநகரசபைத் தேர்தல்கள் கனடிய நேரப்படி இன்றிரவு 8 மணிக்கு முடிவுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதன்பிரகாரம் ரொப் போட் ரொறன்ரோவின் மேயராக பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றி நிகழ்வில் ரொப் போட் தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டக் கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றான மாலையணிவித்து பராட்டப்பட்டிருந்தார்.

இந் நிகழ்வு ஆரம்பத்தில் இடம்பெற்றாலும் ரொப் போட் தனது வெற்றியுரை முடியும் வரை மாலையணிந்தவாறே தோன்றியிருந்தார். இது சகல ஊடகங்களாலும் பிரபல்யப்படுத்தி ஒளிபரப்பட்டது.

இதேவேளை கவுன்சிலர் பதவிக்கான தமிழ் வேட்பாளர்களில் நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதப்பட்ட நீதன் சாண் என்பவர் எதிர்பார்த்தளவு வாக்குகளைப் பெறவில்லை. இவர் ரொறன்ரோ ஸ்ரார், குளோப் அன்ட் மெயில் ஆகிய இரு பத்திரிகைகளினால் பரிந்துரைக்கப்பட்டவராக இருந்த போதிலும் 19 வருடங்களாக அப் பிரதேச கவுன்சிலராக இருக்கும் றேமன்ட் சோ என்பவர் இந்த முறையும் இலகுவாக வெற்றிக் கணியைத் தட்டிக் கொண்டார்.

இன்னொரு வேட்பாளரான பார்த்தி கந்தவேல் என்பவர் வெற்றிபெற்றவருக்கு மிக நெருக்கமான போட்டியை கொடுத்த ஒரு வேட்பாளராக காணப்பட்டார்.

அதே போன்று அஸ்வின் பாலசுப்பிரமணியம் என்ற வேட்பாளரும் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தார்.

நமு பொன்னம்பலம், ரோய் விக்னராஜா, ரோஜ் ரட்ணவேல், வேந்தன் ராமநாத வவுனியன் போன்ற வேட்பாளர்களும் இந்தத் தேர்தலில் குறிப்பிடத்தக்க போட்டியை வெற்றி பெற்றவர்களிற்குக் கொடுத்து தோல்வியைத் தழுவியிருந்தார்கள்.

ரொப் போட் அவர்களின் பிரச்சாரப் பணிகளிற்கான குழுவாக பணியாற்றிய சாம்; அசோகன், சிறினிவாசன், சுரேன் சிவா, ரேவதி சாமிநாதன் ஆகியோரது அணிகளின் முயற்சியால் ரொப் போட் அவர்களின் முகாமை தமிழர்கள் சார்பாக மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றி பெற்றதையிட்டு ரொறன்ரோ மக்கள் மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர்.

கனடா மார்க்கம் நகரசபைத் தேர்தலில் இரண்டு தமிழர்கள் வெற்றி!

கனடாவின் ரொறன்ரோ மாநகரசபைக்கு அண்மித்த பிரதேசமான மார்க்கம் நகரசபைத் தேர்தலில் இரண்டு தமிழர்கள் வெற்றியீட்டியுள்ளனர்.

இது தமிழர்களிற்கு கனடா தழுவிய ரீதியில் கிடைத்த வெற்றிகளாகும். இதேவேளை இன்னொரு நகரான மிசசாகாவிற்கான மேயராகப் போட்டியிட்ட தமிழரான ராம் செல்வராசா தோல்வியைத் தழுவிக் கொண்டுள்ளார்.

கனடிய வரலாற்றிலேயே முதன்முதல் உள்ளூராட்சிச் சபைக்கு 2006ம் ஆண்டு தெரிவான தமிழரான திரு.லோகன் கணபதி இம்முறை மார்க்கம் ஏழாம் வட்டாரத்தில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். திரு. லோகன் கணபதி 3,558 வாக்குகளையும் அவருக்கு அடுத்த இடத்தில் உளளவர் 2,768 வாக்குக்களையும் பெற்றார்.

இதேவேளை இதே தேர்தலில் இப் பிரதேசத்திற்கான கல்விச்சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்ட செல்வி. யுவனிதா நாதன் 8,252 வாக்குக்களைப் பெற்றுத் தெரிவானார். இவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் 1,968 வாக்குகளைப் பெற்றார்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to ரொறன்ரோ நகரசபை தேர்தலில் இரண்டு தமிழர்கள் வெற்றி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com