Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மீது போடப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு சட்டம் குறித்த வழக்கு விசாரணை தமிழக அரசின் சூழ்ச்சியால் தடைபட்டு கொண்டே வருகிறது.எனவே இதை எதிர்த்து செந்தமிழன் சீமான் அவர்களது வழக்கின் மீதான விசாரணையை விரைந்து முடித்து அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய சென்னை நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேராசிரியர் தீரன், ஆசி, ராசா, நெல்லை சிவக்குமார், அன்பு தென்னரசன், புகழேந்தி தங்கராசு, ஆவல் கணேசன், அதியமான்,தங்கராசு, அமுதாநம்பி மற்றும் திரளான செயல்வீரர்கள் கலந்து கொண்டனர். செந்தமிழன் சீமான் அவர்களது வழக்கின் தன்மையை திரு,ஆசி,ராசா அவர்கள் விளக்கினார். தங்களது போராட்ட வியூகங்களை தெரிவிக்க உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கபட்டது. சாலை மறியல்,உண்ணாவிரதம் இருத்தல்,ஆளுநர் மாளிகை, வேலூர் சிறை, சட்டபேரவை ,தலைமைச் செயலகம் ஆகிய இடத்தில் முற்றுகை போராட்டம், செந்தமிழன் சீமான் அவர்களது கைது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகன பரப்புரை,மிதி வண்டி பரப்புரை,நடை பயணம்,பொதுக்கூட்டங்கள், கண்டன ஆர்பாட்டங்கள் என உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

இறுதியாக பேராசிரியர் தீரன் அவர்கள் நீதி கேட்டு நடைபயணம் என்ற பெயரில் நடை பயணம் மேற்கொள்வதுடன்,கண்டன பொதுக்கூட்டமும்,நடத்தலாம் என்று தெரிவித்தார்.அந்த கூட்டத்திற்கு மனித உரிமை ஆர்வலர்கள்,சட்ட வல்லுனர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோரை அழைக்கலாம் என்று தெரிவித்தார்.இது குறித்த கட்சியின் தலைமை குழு கூடி முடிவெடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to செந்தமிழன் சீமான் அவர்களது வழக்கு குறித்து நடந்த செயல்வீரர்கள் கூட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com