Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தான் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாகவும், பெரும் உயிரச்சுறுத்தலான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும் சரத் பொன்சேகா தெரிவிக்கின்றார்.

சரத் பொன்சேகாவின் மனு மீதான விசாரணை நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீதிமன்றத்துக்கு வருகை தந்த அவர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

என்னைப் படுகொலை செய்வதற்கான சதித்திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியும், பாதுகாப்புச் செயலாளரும் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அதே நேரம் தனக்கெதிரான முதலாவது இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பை இரத்துச் செய்யும்படி சரத் பொன்சேகா தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பு பெரும்பாலும் நாளை வழங்கப்படலாம் என்று தெரிய வருகின்றது.

அத்துடன் மனு மீதான தீர்ப்பு சரத் பொன்சேகாவுக்கு பெருமளவில் சாதகமாக அமையலாம் என்றும் நீதிமன்றத் தகவல்கள் ஹாஷ்யம் தெரிவிக்கின்றன.

குறித்த இராணுவ நீதிமன்றத்தின் பிரகாரமே சரத் பொன்சேகாவின் ஜெனரல் நிலை, ஓய்வூதியம், இராணுவப் பதக்கங்கள் என்பன பறிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to எனக்குப் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது: பொன்சேகா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com