சரத் பொன்சேகாவின் மனு மீதான விசாரணை இரண்டு நீதியரசர்கள் முன்னிலையில கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
அதன் பிரகாரம் சரத் பொன்சேகாவிற்கு அநீதியேதும் இழைக்கப்பட்டிருக்கலாம் என்று நீதிமன்றம் கருதுகின்ற காரணத்தால் அவர் தொடுத்துள்ள மனு மீதான விசாரணையை ஏற்பதற்குத் தீர்மானித்துள்ளது.
ஆயினும் இராணுவ நீதிமன்றம் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதா மற்றும் சரத் பொன்சேகாவின் வழக்கு முடியும் வரை அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படக் கூடாது என்ற தடையுத்தரவுக் கோரிக்கை என்பன தொடர்பில் நீதிமன்றம் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.
அது தொடர்பாக பிரதம நீதியரசர் மற்றும் சட்ட மா அதிபரின் ஆலோசனைகள் கோரப்பட்டுள்ளன.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to பொன்சேகாவின் மனு தொடர்பில் பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை