Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணத்தில் வீசா காலம் முடிவடைந்தும் அதிக நாட்கள் தங்கியிருந்த இந்திய தமிழகத்தைச் சோ்ந்த புடவை வியாபாரிகள் இலங்கைப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை தடுத்து வைத்திருக்கும் இடம் இன்னும் வெளியாகவில்லை.

இவர்கள் கடந்த புதன்கிழமையன்று இலங்கையின் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு கடத்துவதை போல கொண்டு செல்லப்பட்டனர்

இந்தநிலையில் இவர்கள், கொழும்பில் உள்ள குற்றப்புலனாய்வுதுறையில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் உத்தியோகபூர்வமாக அவர்கள் இருக்கும் இடம் தெரிவிக்கப்படவில்லை

இந்தநிலையில், யாழ்ப்பாணத்தில் குறித்த வர்த்தகர்கள், தங்கியிருந்த விடுதிகளில் இருந்து படையினர் அவர்களை கைதுசெய்த போது அவர்கள் விட்டு சென்ற உடமைகளை அவர்களிடம் ஒப்படைக்க வழிதெரியாமல் யாழ்ப்பாண விடுதிகளின் உரிமையாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to யாழில் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட தமிழக புடவை வியாபாரிகள் இருக்கும் இடம் தெரியவில்லை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com