Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், அப்பாவித் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும். இவ்வாறு பிரபல சட்டத் தரணி கொமின் தயாசிறி தெரிவித் துள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியமளித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியவை வருமாறு:

யுத்தத்தின்போது தமிழ் மக்கள் எதிர்நோக்கிய அவலங் களுக்கு எரிக் சொல்ஹெய்மும் முக்கிய பொறுப்பாளி.

எரிக் சொல்ஹெய்ம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான முறையில் செயற்பட்டு வந்தார். அதேவேளை, அரசைச் சேர்ந்த சிலரும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

சொல்ஹெய்ம் புலிகளுடன் நட்புறவைப் பேணினாரே தவிர, அவர் சமாதான ஏற்பாட்டாளராகச் செயற்படவில்லை.

தமிழீழ விடுதலைப் புலி களுடனான சமாதான முனைப் புக்களின்போது நோர்வேயை சமாதான ஏற்பாட்டாளராக தெரிவு செய்தமை பெரும் தவறாகும்.

ஆசிய கலாச்சாரத்தையோ, நாகரீகங்களையோ நோர்வேசமூகம் அறிந்திருப்பதற்கான நியாயம் கிடையாது. இதனால், சமாதான ஏற்பாட்டாளராக மேற்குலக நாடொன்றைத் தெரிவு செய்தமை பொருத்தமற்றது.

தமிழ் சிங்கள மக்களின் மனநிலையை நோர்வே அரசோ அல்லது எரிக் சொல்ஹெய்மோ அறிந்திருக்க வாய்ப்பில்லை.” இப்படி அவர் தெரிவித்தார்.

0 Responses to ஈழத் தமிழ் மக்களிடம் சொல்யஹய்ம் மன்னிப்புக் கேட்க வேண்டும்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com