தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில் இரண்டாவது தங்கப்பதக்கத்தையும் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஜிம்னாஸ்டிக் குழுநிலைப்போட்டியில் முதலாவது தங்கப்பதக்கத்தை பெற்ற இவ்வீரன் தனிநபருக்கான போட்டியிலும் தனது இரண்டாவது பதக்கத்தை பெற்றுள்ளார்.
இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்றுவரும் இப்போட்டிகளில் செல்லத்துரை பிரசாந்த்தின் அதீத திறமைக்காக ஆகக்கூடிய புள்ளியான 15.500 ஐக்கொண்டதாகவும், இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்ட இங்கிலாந்தைச் சேர்ந்த வீரர் 14.125 புள்ளிகளையே பெற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1986 ஆம் ஆண்டு பிறந்த பிரசாந்த தனது ஐந்து வயதிலேயே ஜிம்னாஸ்ரிக் தொடர்பான பயிற்சிகளில் ஈடுபடதொடங்கியிருந்தார். இவரது தனித்திறமைகாரணமாகவே குறித்த விளையாட்டில் அவுஸ்திரேலியாவின் தரம் சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்களவில் உயரும் எனவும் எதிர்வு கூறப்படுகின்றது.







பார்த்திபன் தமிழ் நாடு
அவுஸ்திரேலியாவுக்கு ஈழ தமிழர் சம்பாதித்து தரும் தங்க பதக்கங்கள் வேண்டும், ஆனால் நொந்து நூலாகி வரும் தமிழ் அகதிகளை தமிழ் தீவிரவாதி என்று முத்திரை குத்தி, நாட்டில் நுழைவதை தடுப்பது எந்த விதத்தில் நியாயம்.