திருமலை பட்டின சபையின் பராமரிப்பில் இதுவரைகாலமும் பேணப்பட்ட கன்னியா நீரூற்றுக்கள் அமைந்துள்ள பகுதி சிறிலங்காவின் தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமானது என கூறி அங்கு வைக்கப்பட்டிருந்த அறிவிப்புபலகைகள் அனைத்தையும் நீக்குமாறு முன்னாள் இராணுவத்தளபதி அறிவுறுத்தியுள்ளார்.
பண்டைத்தமிழ் அரசன் இராவணனால் இவ்வெந்நீருற்றுக்கள் கட்டப்பட்டது எனவும் அவனது தாயாரின் அந்தியேட்டி கிரியை மேற்கொள்வதற்காக பிள்ளையார் கோவிலை கட்டுவித்தான் எனவும் அறிவிப்பு பலகை ஒன்றை திருமலை பட்டினசபை நிர்வாகத்தால் நிறுவப்பட்டிருந்தது.
பொதுமக்களுக்கு தவறான தகவல்களை கூறிய குறித்த இராணுவதளபதி அதனை அகற்றுமாறு கூறி உடனடியாகவே அதனை அகற்றியுள்ளார். இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
சிகல உறுமய பௌத்தபிக்குகளின் நெருக்குதலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் இனிமேல் வெந்நீரூற்றுக்கள் பராமரிப்புபணியை குறித்த பிரதேசசபை மேற்கொள்ளத்தேவையில்லை எனவும் அதனை சிறிலங்கா தொல்லியல் திணைக்களம் மேற்கொள்ளும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவின் தொல்லியல் திணைக்களம் சிகல உறுமயவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு திணைக்களமாகும். இலங்கைத்தீவின் அனைத்து இடங்களிலும் ஆய்வுகளை மேற்கொள்வதுடன் அதனை பௌத்தமதத்துடன் தொடர்புபடுத்தி சிங்கள மேலாதிக்கத்தை நிறுவும் முயற்சியின் ஒரு பகுதியாகவே தற்போது கன்னியா வெந்நீரூற்றுக்கள் பகுதியை உரிமை கோரப்படுவதாக பிரதேச சபையினர் தெரிவித்துள்ளனர்.



0 Responses to கன்னியா வெந்நீருற்றுக்கள் சிகல உறுமயவின் தொல்லியல் திணைக்களத்திடம் பறிபோகின்றது!