இந்த சடலம் நேற்று மாலை 5.30 மணியளிவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒட்டிச்சுட்டான் 14 ஆம் கட்டைப் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்த சடலம் அதேபிரதேசத்தைச் சேர்நத 53 வயதுடைய ஆள்வாபிள்ளை துரைராசாவினுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
தனது தந்தையை காணாத மகன் ரஜிந்தன் மேற்குறிப்பிட்ட தனது தந்தையின் சடலத்தை கண்டு பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து முல்லைத்தீவு நீதவானின் உத்தரவிற்கு அமைய சடலம் மீட்டகப்பட்டு வவனியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
குடும்பத் தகராறு காரணமாக இவர் நஞ்சுண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் மரணம் குறித்து சந்தேகம் நீடிக்க மேலதிக பரிசோதனையை மேற்கொள்வற்காக சடலத்தை அநுராதபுர வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. குறித்த நபர் உயிரிழந்து ஒன்பது நாட்களுக்கு பின்னரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



0 Responses to முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டானில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு