Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கும்பகோணம் அருகில் உள்ள பந்தநல்லூரில்27-10-10 புதன் அன்று மாலை 6.00 மணியிலிருந்து இரவு 10 மணி வரை நாம்தமிழர் கட்சியின் சார்பாக கடந்த 100 நாட்களாக பொய் வழக்கின் காரணமாகதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் செந்தமிழன் சீமான்சிறையிலடைக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், விலைவாசி உயர்வைக் கண்டித்தும் ,கட்டுமானப்பொருட்கள் விலை உயர்வினை கண்டித்தும், அதிகரித்து வரும்மின்வெட்டினால் தமிழகம் இருண்டு கிடப்பதை கண்டித்தும் மாபெரும்பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

காவல்துறை அனுமதி மறுப்பினால்தடைப்பட்டிருந்த இக்கூட்டம் மதுரை உயர்நீதிமன்றத்தில் கும்பகோணம் நாம்தமிழர் கட்சியினர் வழக்கு தொடர்ந்த காரணத்தினால் அனுமதி வழங்கப்பட்டுவெகு உணர்வெழுச்சியாகவும், சிறப்பாக நடந்தேறியது. இக்கூட்டத்திற்கு தஞ்சைமாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வினோபா என்ற வீரக்குமரன் தலைமைதாங்கினார். இக்கூட்டத்தில் கும்பகோணம் நாம் தமிழர் மகளிரணி அமைப்பாளர்செல்வி வாணி, கும்பகோணம் நகரத் தலைவர் ரகமதுல்லா என்ற தமிழ்வேந்தன்,நகரச்செயலாளர் நாதன் என்ற அரசு ,ஒன்றிய செயலாளர் எஸ்.புதூர் செல்வம்,ஒன்றிய செயலாளர் கல்லூர் முருகானந்தம், நாம் தமிழர் சான்றோர் குழுஉறுப்பினர். பெருந்தமிழர்.பேரா. மணி , மாநில ஒருங்கிணைப்பாளர்கள்வழக்கறிஞர் மணி.செந்தில் என்ற திலீபன் , வழக்கறிஞர் .நல்லதுரை ஆகியோர்உரையாற்றினார்கள்.

கூட்டத்தில் புகழ்ச் செல்வி ஆசிரியர் பரணிபாவலன்மற்றும் காரைக்கால் பகுதி ஒருங்கிணைப்பாளர் குமணன் உள்ளீட்ட பல நாம்தமிழர் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர். கூட்டத்தினை கும்பகோணம் இளைஞரணிஅமைப்பாளர் வீரப்பன் தொகுத்து வழங்கினார். கிராமப் பகுதியாக இருந்தாலும்1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இரவு 10 மணி வரை திரண்டு நின்று பொதுக்கூட்டத்தினை சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

கூட்டத்திற்கு பந்தநல்லூர்நாம் தமிழர் கட்சியினர் மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to கும்பகோணம் அருகில் உள்ள பந்தனலூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டம் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com