மருமகனான தனுன திலகரட்னவின் ஹை கோப் நிறுவனத்தின் ஊடாக ஆயுத ஊழலில் ஈடுபட்டதாக கூறி சரத் பொன்சேகாவுக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இரண்டாம் பிரதிவாதியாகிய ஹை கோப் நிறுவன பணிப்பாளர் வெலிங்டன் டீ ஹோட்டுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 5 வருட கடூழிய சிறைத்தண்டனையை விதித்துள்ளது.தமது குற்றத்தை ஏற்றுக்கொண்ட நிலையிலேயே அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்த வழக்கின் பிரதான பிரதிவாதியாகிய தனுன இன்னும் தலைமறைவாகியுள்ளார். சரத் பொன்சேகா இந்த வழக்கின் மூன்றாவது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
பொன்சேகாவின் செயலர் சேனக டி சில்வா விடுவிப்பு
இதனை தவிர சரத் பொன்சேகாவின் உதவியாளராக செயற்பட்ட சேனக சில்வாவை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.
அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான சதி முயற்சியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சரத் பொன்சேகாவுடன் கைது செய்யப்பட்டிருந்த அவரது செயலாளர் கப்டன் சேனக டி சில்வா பிரஸ்தாப குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கெதிரான சாட்சியங்களை ஆராய்ந்த சட்ட மா அதிபர் திணைக்களம் போதுமான சாட்சியங்கள் இல்லாத காரணத்தால் வழக்கிலிருந்து அவரை விடுவிக்க சிபார்சு செய்துள்ளதாக இரகசியப் பொலிசார் நீதிமன்றுக்கு அறிவித்ததையடுத்தே கொழும்பு நீதவான் அவருக்கெதிரான சதிக் குற்றச்சாட்டை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.
ஆயினும் சரத் பொன்சேக்கா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட காலப்பகுதியில் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களைக் கொண்டு அவருக்குப் பாதுகாப்பளித்த குற்றச்சாட்டின் பேரிலான வழக்கு விசாரணைகளுக்காக சேனக டி சில்வா தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிரஸ்தாப வழக்கின் விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
தற்போதைய நிலையில் சேனக டி சில்வா சுமார் ஒன்பது மாத காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



0 Responses to தனுன திலகரட்ன தொடர்பான வழக்கின் 2 ம் பிரதிவாதிக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனை