Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாம் தமிழர் கொள்கைவிளக்க பொதுக்கூட்டம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம், பாலமேடு நகரில் 16.10.2010 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்றது . கூட்டத்திற்கு அலங்காநல்லூர் ஒன்றிய பொறுப்பாளர் பழ. பாக்கியராசு தலைமை ஏற்றார் . திரு பாலமோகன் அவர்கள் வரவேற்புரை வழங்க சந்துரு, மகேசுவரன், செல்லபாண்டியன் முன்னிலை வகித்தனர்.

மதுரை நான்காம் பகுதி பொறுப்பாளர்கள் சிவானந்தன், இராமநாதன், நாகராசு,மற்றும் ,அரசகுமார், சுந்தரராசு, செபஸ்டியன், ஆல்பர்ட், செயராசு, சுதாகரன் புறநகர் பொறுப்பாளர்கள், ஐந்தாம் பகுதி பொறுப்பாளர்கள் , தளபதி மாரி உள்ளிட்டவர்களும் பாலமேடு பகுதியின் தமிழ் உறவுகளும் கலந்துகொண்டனர்.

இயக்குனர் சிபிச்சந்திரன் சிறப்புரை ஆற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன், வழக்கறிஞர் சீமான், திருப்பரங்குன்றம் செந்தில்,சோழவந்தான் மாரியப்பன் , ஆகியோர் உரை ஆற்றினர். சிறப்பாக நடைபெற்ற இக்கூட்டத்தில் வை. பாலு அவர்கள் நன்றி கூறினார்.

0 Responses to மதுரை மாவட்டம் பாலமேடு நகரில் நடைபெற்ற நாம் தமிழர் கொள்கைவிளக்க பொதுக்கூட்டம் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com