தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா, சட்டத்தரணி மோகன் பாலேந்திரா மூலம் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.
உள்ளுராட்சி அதிகார சபை விசேட ஏற்பாடுகள் சட்ட மூலம், மற்றும் உள்ளுராட்சி அதிகாரசபை தேர்தல் திருத்த சட்ட மூலம் ஆகியவற்றை ஆட்சேபித்தே தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று இரண்டு ஆட்சேபனை மனுக்களை தாக்கல் செய்தது.
இந்த இரண்டு சட்ட மூலங்களும் இலங்கையின் அரசியல் அமைப்பின் உறுப்புரிமை 154 ஜீ 3 க்கு இணங்காதிருப்பதாக அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த சட்ட மூலங்கள் மாகாண சபைகளின் பங்குபற்றலுடன் கொண்டு வரப்பட வேண்டும். எனினும், வடக்கு மாகாண சபை இயங்காத சூழ்நிலையில் அதன் அபிப்பிராயம் இந்த சட்ட மூலங்களுக்காக பெற்றுக் கொள்ளப்படவில்லை.
இந்த சட்டவாக்க ஆலோசனை முறைமையில் வட பகுதி மக்களின் உரிமை மறுக்கப்பட்டுள்ளது என கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த காரணங்களுக்காக இந்த சட்ட மூலத்தை தாம் ஆட்சேபிப்பதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 Responses to உள்ளுராட்சி சட்ட மூலங்களுக்கு எதிராக கூட்டமைப்பு வழக்கு