Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மரணிக்கும் வரையில் சிறையிலேயே அடைபட்டுக் கிடந்தாலும் செய்யாத குற்றத்துக்காக ஒருபோதும் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கமாட்டேன். நான் தைரியமாகவே இருக்கிறேன். எனவே, ஆதரவாளர்களும் அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா தெரிவித்தார்.

வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணை கொழும்பு மேல்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் ஆஜர்படுத்துவதற்கென சரத் பொன்சேகா நேற்று திங்கட்கிழமை வெலிக்கடை சிறையிலிருந்து நீதிமன்றுக்கு அழைத்து வந்த போது நீதிமன்ற வளாகத்தில் வைத்து அங்கு கூடியிருந்த ஆதரவாளர்களை பார்த்து மேற்கண்டவாறு கூறினார்.

நீதிமன்ற விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட சரத் பொன்சேகாவை பார்ப்பதற்காக மேல்நீதிமன்ற வளாகத்தில் ஆதரவாளர்கள் கூடி நின்றனர்.

ஆதரவாளர்களை பார்த்த பொன்சேகா, நீங்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை. அச்சப்படவும் வேண்டாம். நான் குற்றமற்றவன் என்ற வகையில் தைரியத்துடன் இருக்கிறேன்.
ஆகவே, நீங்களும் தைரியமாக இருங்கள்.

எனக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டாலும் அல்லது சிறையிலேயே எனக்கு மரணம் ஏற்பட்டாலும் கூட எந்தச் சந்தர்ப்பத்திலும் எவரிடமும் மண்டியிட்டு மன்னிப்பு கோர மாட்டேன் என்றார்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to மரணிக்கும் வரை சிறையில் இருந்தாலும் மன்னிப்பு கேட்கமாட்டேன்: பொன்சேகா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com