மட்டக்களப்பு செங்கலடியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் இராணுவத்தினரின் அடக்கு முறைகளுக்கு உட்படுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் மீளமைப்புக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியம் வழங்கிய வந்தாறுமுல்லை கிராம அபிவிருத்தி சமூகத்தின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில், மீள்குடியேற்றம் என்ற பெயரில் பொது மக்கள் கைவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் பலவற்றை, முஸ்லிம் மக்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதியின் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
கடந்த 1999ம் ஆண்டில் இருந்து 2009ம் ஆண்டு வரையான காலப்பகுதியில், மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் இராணுவத்தினரின் எறிகணை தாக்குதலால் கொல்லப்பட்டனர்.
அவர்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டன. எனினும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கம் எந்த விதமான நிவாரணத்தையும் வழங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to தென் தமிழீழம் மட்டக்களப்பு செங்கலடியில் இராணுவத்தினரின் அடக்குமுறை