Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

30.10.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துன்கிந்த என்ற எரிபொருள் வழங்கல் கப்பலை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் கடலரசன், மேஜர் கஸ்தூரி, கப்டன் கனியின்பன், கப்டன் அன்புமலர் ஆகியோரின் 9ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

யாழ். வலிகாமம் பகுதியில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட சூரியக்கதிர் படைநடவடிக்கைக்கு எதிரான சமரில் 30.10.1995 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அகிலா, லெப்.கேணல் உருத்திரா(உருத்திரன்) ஆகியோரின் 15ம் ஆண்டு நினைவு நாளும், 30.10.2006 அன்று மட்டு மாவட்டம் வாகரைப் பகுதியில் அரவம் தீண்டியதனால் சாவடைந்த லெப்.கேணல் வரதா(ஆதி) அவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும்.



தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.









மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to "துன்கிந்த" வழங்கல் கப்பல் மூழ்கடிப்பில் காவியமான கடற்கரும்புலிகள் நினைவு நாள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com