OSNABRUCK நகரத்தில் நகரப்பிரதிநிதி ஒருவரையும், ;> SPD கட்சியின் முதன்மை பிரதிநிதி ஒருவரையும், சேர்மனியின் மூன்றாவது நிலையிலிருக்கும் பத்திரிகையின் நிருபர் ஒருவரையும் பயணக்குழுவினர் சந்தித்ததோடு, தனித்தனியே கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கையளித்ததுடன், எமது நிலைப்பாடு தொடர்பாகவும் விளக்கமளித்திருந்தனர்;. அத்தோடு எம் உறவுகளையும் சந்தித்திருந்தனர்;.இன்று OSNABRUCK என்னும் இடத்திலிருந்து தொடங்கப்பட்ட மிதிவண்டிப் பயணம் 5 பாகை குளிர்காலநிலையில் மலைப்பாதை வழியாக 100 கிலோமீற்றர்களை ஆறுமணித்தியாலத்தில் கடந்து STADT HAGEN நகரத்தை வந்தடைந்துள்ளது.
இவர்களின் பயணம் நாளை HANNOVER ஐ நோக்கிப் பயணிக்கவுள்ளது. மேலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22.10.2010) அன்று நடைபெறவுள்ள கவனயீர்ப்பு நிகழ்வில் புலம்பெயர்வாழ் தமிழீழ உறவுகள் அனைவரும் பங்குகொண்டு அனைத்துலக நாடுகளிடம் முறை (நீதி) கேட்க அணிதிரள்வதோடு, தொடர்போராட்டங்களை முன்னெடுக்க இளையோரை முன்வருமாறு அழைப்புவிடுத்துள்ளனர் பயணக்குழுவினர்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to ஏழாவது நாளைக் கடக்கும் மிதிவண்டிப்பயணம் (படங்கள் இணைப்பு)