Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத் தமிழர் போராட்ட வரலாறு தெரியாதவர் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு என குற்றம்சாட்டினார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.

கன்னியாகுமரி மாவட்டம், திங்கள்நகரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற மதிமுக பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:

ஈழத் தமிழர்களுக்கு வைகோ என்ன செய்தார் என தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு விமர்சனம் செய்துள்ளார். இதைப் பற்றி நான் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. ஈழத்தமிழர் போராட்ட வரலாறு தெரிந்திருந்தால் அவர் என்னைப் பற்றி விமர்சித்திருக்க மாட்டார்.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, நாடாளுமன்றத்தில் இது குறித்து கவன ஈர்ப்பு தீர்மனம் கொண்டு வந்து பேசினேன். வங்கதேசத்தைப் போல தமிழ் ஈழத்தையும் உங்களால்தான் உருவாக்கி கொடுக்க முடியும் என வலியுறுத்தினேன். சுவீடன் நாட்டுக்குச் சென்று மனித உரிமை கமிஷனிடம் ஈழத் தமிழர்களின் நிலை குறித்து 21-10-1998-ல் மனு கொடுத்தேன்.

விடுதலைப் புலிகள் மீதான தடைகள் நீக்கப்பட வேண்டுமென நீதிமன்றத்தில் 8 நாள்கள் சென்று வாதாடினேன். விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 2 ஆண்டுகள் நீடிக்கும் என்ற தீர்ப்பால் நான் துவண்டுவிடவில்லை என்றார் வைகோ.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

1 Response to ஈழத் தமிழர் போராட்ட வரலாறு தெரியாதவர் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு: வைகோ

  1. nakkira mattukku sekkenna sivalingam enna pathavikku kal kaluvum naykalaippattri yosikka vendam vaiko ann nengal unkal paniyai thodarungal nangal ungalai mulumaiyaga nambuginrom

    tmaileela makkal

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com