Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

1983 யூலைக் கலவரம் நடந்த போதெல்லாம் தமிழகத்தின் மாநிலச் செய்திகள், மாகாணச் செய்திகள், ஆகாசவாணி இவற்றுக்காக வானொலி முன் காத்திருக்கும் மரபொன்று எம்மிடம் இருந்ததை மறந்துவிட முடியாது.

இந்த மரபோடு இலண்டன் பி.பி.சி. தமிழோசையும் வெரித்தாஸும் இணைந்துகொண்டதை மறுப்பதற்கில்லை. இப்படியயல்லாம் வானொலிக்குமுன் குந்தியிருந்து எங்கள் தமிழகத் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறியும் ஆவல் மிகுதியாலாகும். கலைஞர் கருணாநிதியின் குரலைக்கேட்டாலே மெய் சிலிர்க்கும். அவரின் பேச்சு ஈழத் தமிழனின் குருதியில்அயன்சேர்க்கும். அட! எங்கள் ஐயா கலைஞர் இருக்கிறார் என்ற நம்பிக்கை தரும். ஒருமுறை அவரின் பேச்சில் ஈழத்தமிழர்களுக்கு ஆபத்தென்றால் காகமாய் பறந்தேனும் ஈழம் சென்று அவர்களைக் காப்பாற்றுவோம் என்று கூறினார்.

அவரின் கூற்றினால் காகங்களும் தாம் பெருமை பெற்றதாக எண்ணின எனலாம். 1983இல் எங்களுக்காக பேசிய கலைஞர் இருபத்தேழு வருடங்கள் கடந்து இப்போது பேச்சை அடக்கி கடிதம் எழுதுகிறார். ஆம், சோனியா காந்திக்கு எழுதும் கடிதங் களே அவை. கலைஞரின் கடிதத்திற்கு சோனியா அம்மையார்ஈழத்தமிழர்களின் விடயத்தை மத்திய அரசு கவனித்துக் கொண்டிருக்கிறதுஎனப் பதில் தருவார்.

சிலகாலம் கடக்கும். கால ஓட்டத்தில் எம்மவர்கள் இந்தியா செல்லும் வேளையில் கலைஞரைச் சந்திப்பர். அந்தச் சந்திப்புக்குப் பின்பும் ஒரு கடிதம் எழுதப்படும். அதற்கும் சோனியா அம்மையார் பதில் கடிதம் எழுதுவார். ‘ஈழத்தமிழர்களின் விடயத்தில் மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறதுஎன அந்தப் பதில் இருக்கும். ! கலைஞரின் முதற்கடிதத்திற்கு மத்திய அரசு கவனிக்கிறது எனப் பதில். இரண்டாவது கடிதத்திற்கு உன்னிப்பாகக் கவனிக்கிறது. ஆக! ஏதோ நடக்கப் போகிறது என்ற நப்பாசையில் எங்கள் ஊடகங்களும் அதனை ஊதிப் பெருப்பித்து செய்தியாக்கிக்கொள்ள, பேதை மனம்மாறா எங்கள் மக்கள் இந்தியா ஏதோ செய்யப்போவதாக நினைத்துக்கொள்வர்.

கடிதம் எழுதுவதில் கைதேர்ந்த கலைஞர் மீண்டும் அம்மாவுக்கு கடிதம் அனுப்புவார். அதற்குப் பதில்மிகவும் உன்னிப்பாக அவதானிக்கின்றோம்என்பதாக இருக்கும். கடவுளே! 1983 யூலையில் தொடங்கி புதுமாத் தளன்- நந்திக் கடலென எல்லாம் இழந்து, கடந்து முட்கம்பி வேலிதாண்டி சீனரும் பாகிஸ் தானியரும் இலங்கைக்கு ஊடுருவி இந்திய, உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாணத்தில் குடியிருக்க முன்னதாக நாவற்குழியில் குடியேற்றமும் நடந்து முடியும் போது, சோனியா அம்மையார் எதை உன்னிப்பாக அவதானிக்கிறார்.

அட! எல்லாம் பராசக்தி படம் போல கதைவசனம் அவ்வளவுதான்.கலைஞர் காகிதத்தில் கப்பல் செய்ய, சோனியா அதில் ஈழத்தமிழரை ஏற்றி கரை சேர்ப்பாராம் இது நடக்கின்ற காரியமோ?

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to காகிதத்தில் கப்பல் செய்வார் கலைஞர் அதில் எங்களை ஏற்றுவார் சோனியா: வலம்புரி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com