மாலை ஆறு மணி முப்பது நிமிடத்திற்கு கனேடிய தேசிய கீதத்துடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து தமிழீழக் கொடிக்கீதம் ஒலிக்கப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றும் நிகழ்வும் இடம்பெற்றது.
அதனைத்தொடர்ந்து எமது தாயக விடுதலைக்காக தம்முயிரை வித்தாக்கிய மாவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியின் முன்னின்று அகவணக்கமும் பின்னர் மலர்வணக்கமும் இடம்பெற்றது. இதன்பின்னர் பல்கலைக்கழக மாணவர்களின் நெறியாள்கையில் நடனங்கள், பேச்சுக்கள், பாடல்கள் , போன்றவை இடம்பெற்றன. குறிப்பாக மாணவர்களின் பேச்சு மிகவும் எழுச்சி உரைகளாக அமைந்தன .
பல எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் இந்த நிகழ்வை சிறப்பாக நடத்தியிருந்தர்கள் எனபது குறுப்பிடத்தக்கது
இந்நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய மாணவர்களின் உணர்வுகள் அவர்கள் தாயகவிடுதலையில் கொண்டுள்ள உறுதியைப் பறைசாற்றி நின்றன. இறுதியில் மாவீர்ர்களின் கனவை நனவாக்க தொடர்ந்து போராவோம் என்ற உறுதிமொழியுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.









0 Responses to கனடா ஓஷ்சாவா பல்கலைக்கழக மாணவர்கள் முனெடுத்த மாவீரர் நாள் நிகழ்வு (படங்கள் இணைப்பு)