Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வெள்ளைக் கொடி வழக்கு விசாரணைக்காக இன்று நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட சரத் பொன்சேகாவை நெருங்கிச் செல்வதற்கு ஊடகவியலாளர்களை பொலிசார் அனுமதிக்கவில்லை.

அவரைப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதாக இருந்தாலும் தூரத்தில் இருந்தே எடுத்துக் கொள்ளுமாறு பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் கண்டிப்பான தொனியில் ஊடகவியலாளர்களிடம் எச்சரித்திருந்தார்.

அத்துடன் சரத் பொன்சேகா நீதிமன்ற வளாகத்தினுள் நுழைந்தவுடன் அவரை ஊடகவியலாளர்கள் உட்பட யாரும் நெருங்க முடியாத வண்ணம் சீருடை மற்றும் சிவில் உடை தரித்த பெருமளவான பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

ஆயினும் பொலிசாரின் கடுமையான கண்டிப்பையும் மீறி ஊடகவியலாளர்கள் சரத் பொன்சேகாவை நெருங்கிச் சென்று புகைப்படம் எடுத்திருந்தனர்.

பொன்சேகா ஊடகவியலாளர்களிடம் ஏதாவது கருத்துத் தெரிவிப்பதைத் தடுக்கும் நோக்கிலேயே பொலிசார் இன்று அவ்வாறான கட்டுப்பாடுகளை விதித்திருக்கக் கூடும் என்று அது பற்றி எம்மிடம் கருத்துத் தெரிவித்த ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதே வேளை வெள்ளைக் கொடி வழக்கின் அரச தரப்பு சாட்சியான சண்டே லீடர் ஆசிரியர் பிரெட்ரிக்கா இன்றும் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டார்.

வெள்ளைக்கொடி வழக்கு தொடர்பாக பத்திரிகை வாயிலாக விமர்சனங்கள் முன்வைப்பது தொடர்பில் அவர் இன்று நீதிபதிகளால் கடுமையாக எச்சரிக்கப்பட்டமை இன்றைய நீதிமன்ற விசாரணையின் போது நடைபெற்ற குறிப்பிடத்தக்க விடயமாகும்.



0 Responses to வெள்ளைக்கொடி வழக்கின் போது பொலிசார் அட்டகாசம் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com