Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஓயாத அலைகள் 3 பாரிய படை நடவடிக்கையில் ஒட்டுசுட்டான் படைத்தளம் மீதான தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் ராகவன், தளபதி லெப்.கேணல் இளையவன்(நியூட்டன்) உட்பட்ட மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

02.11.1999 அன்று தொடங்கப்பட்ட ஓயாத அலைகள் 3 படைநடவடிக்கையின் வெற்றிக்கு அடித்தளமிட்ட ஒட்டுசுட்டான் படைத்தள வீழ்ச்சிக்காக தம்மை ஆகுதியாக்கிய சிறப்புத் தளபதி லெப்.கேணல் ராகவன், தளபதி லெப்.கேணல் நியூட்டன், மேஜர் சாரங்கன்(ஆறுமுகம் கதீபன்), கப்டன் ஜீவராசா(விசுவலிங்கம் சசிக்குமார்), லெப்.இருதயன்(வில்விறட் சுதேசன்), லெப். தரன்(தர்மு செல்வம்), லெப். செல்லத்தேவன்(பழனியாண்டி விமலன்), 2ம் லெப்.வண்ணன் (நல்லையா ரகுசீலன்), 2ம் லெப்.சூசை(சரவணமுத்து சதீஸ்), 2ம் லெப். புரட்சிமதி(கந்தையா அஜந்தன்), 2ம் லெப். நல்கீரன்(லோகநாதன் தவராசா), வீரவேங்கை இசைவேந்தன்(செல்வராசா நிசாந்தன்) ஆகிய சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி வீரர்கள் உட்பட்ட அனைத்து மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.



0 Responses to ஓயாத அலைகள் 3 நடவடிக்கையில் காவியமானோர் நினைவு நாள் இன்று

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com