Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கார்த்திகை பூக்களே உயிர்த்து விடுங்கள்...

பதிந்தவர்: ஈழப்பிரியா 15 November 2010

எம் தேசத்தின் விடியலுக்காக வித்தான வீர மறவர்களே..!
கல்லறை விட்டு எழுந்து வாருங்கள்..
கரிகாலனின் வழியில் சென்று
போர்க் களங்களில் எதிரியை வீழ்த்தி
சந்தன பேழைக்குள் உறங்கும்
எங்கள் மாவீரர்களே எழுந்து வாருங்கள்..

புதிய சரித்திரம் படைப்போம் உயிர்த்து விடுங்கள்…
அன்னியரின் அடிமை விலங்கை உடைத்து
எரிமலையாக எழுந்த சூரிய புதல்வர்களே
தமிழீழ மண்ணில் உயிர்த்து விடுங்கள் ..

கண்கள் மூடி உறங்கும் எங்கள் தோழனே கல்லறையை
விட்டு வெளியே வாருங்களேன்…
கார்த்திகை தீபம் ஏற்றும் வேளையிலே
எங்கள் உள்ளம் துடித்து அழுகின்றோம்
கார்த்திகை பூக்களே எழுந்து வாருங்கள்….

ஈழத்தின் வித்துக்களாய் தமிழீழத்தின் காவற் தெய்வங்களாய்
தேசிய தலைவனின் பிள்ளைகளாய் ..
தமிழீழம்தான் மூச்சென்று சருகாக வீழ்ந்த வீர மறவர்களே
உங்கள் பாதங்களை மலர் தூவி வணங்குகின்றோம்..

எஸ்வீஆர்.பாமினி

0 Responses to கார்த்திகை பூக்களே உயிர்த்து விடுங்கள்...

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com