இன்று திங்கட்கிழமை காலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே சடலம் மீட்க்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு உப்போடையை சேர்ந்த தட்டச்சு இயந்திர திருத்துனரான மரியநேசன் பிரான்சிஸ் (47வயது) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவரை காணவில்லையென நேற்று தமது பொலிஸ் நிலையத்தில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் இவரை தேடிவந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் கடந்த 13ஆம் திகதி மரணமடைந்திருக்க வேண்டும் எனவும் குடும்பத்தினருடன் ஏற்பட்ட முரண்பாட்டில் இவர் தனியாக சென்றிருந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சடல மீட்பு தொடர்பான செய்தியையடுத்து காத்தான்குடி பொலிஸாரும் நீதவானும் ஸ்தலத்துக்கு விஜயம் செய்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்ரனர்.



0 Responses to தென் தமிழீழம் மட்டக்களப்பு நாவலடியில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு (படங்கள் இணைப்பு)