"வடக்கில் அண்மையில் வழங்கப்பட்ட நில அளவையாளர் நியமனங்களில் ஐந்து மட்டுமே தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஏனைய 95 நியமனங்களும் சிங்களவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன" என்ற விடயத்தை கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் அண்மையில் சிறிலங்கா அரச தலைவரின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தார்.
இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன் ”வடக்கு நிர்வாக சேவைகளில் சிங்களவர்களை அதிகளவில் இணைத்துக்கொள்வது இனப்பிரச்சினையை மேலும் கூர்மைப்படுத்திவிடும்”தெரிவித்தார்.
நிர்வாகச் சேவை நேர்முகப் பரீட்சைக்குத் தமிழ்மொழி மூலம் எவரும் தெரிவுசெய்யப்படாமை, வடக்கு மாகாணத்தில் நில அளவை உதவி யாளர்களாகச் சிங்களவர்கள் பெரும் எண்ணிக்கையில் சேர்த்துக் கொள் ளப்பட்டுள்ளமை ஆகியவை தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்:
"நிர்வாகச் சேவைக்கு ஆட்களைச் சேர்த்துக்கொண்டமை திறமை அடிப்படையாக இருக்கலாம். மேலும் நில அளவை உதவியாளர் நியமனம் குறித்து முழு விவரங்கள் எனக்குத் தெரியாது. இருந்தும் வடக்கு நிர்வாகச் சேவையில் பெரும்பான்மை இனத்தவர்களைச் சேர்த்துக்கொள்வது மீண்டும் வன்முறை சார்ந்த போராட்டங்களை ஏற்படுத்தும்.
தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் அரச வேலைகளில் கட்டாயமாகக் கணிசமான தமிழர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டியது அரசின் கடமையாகும். இல்லாவிட்டால், இனப்பிரச்சினை வன்முறைப் பாதை நோக்கி மீண்டும் திரும்புவதற்கு இதுவே வழிவகுப்பதாக அமைந்துவிடும்” என்றார்.



0 Responses to வடக்கில் அரசின் நடவடிக்கைகளால் மீண்டும் மோதல் நிலையே உருவாகும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை