திருச்சிராப்பள்ளி மாவட்ட மூத்த உறுப்பினர் அய்யா பழனியாண்டி (85 அகவை) அவர்கள் நேற்று சாலை விபத்தில் மரணமடைந்தார். அய்யா பழனியாண்டி அவர்களின் இறுதி அஞ்சலி இன்று (15-11-2010) மதியம் 3 மணிக்கு விராலிமலை அருகில் உள்ள அவரின் சொந்த ஊரான வானதிராயண்பட்டியில் நடைபெற்றது.அதில் நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டு கட்சி கொடியுடன் மரியாதை செலுத்தப்பட்டதுஅண்ணன் சீமான் அவர்களை கைது செய்ததை கண்டித்து (12.7.2010) அன்று நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கைதாகி திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் ஒருவாரம் இருந்தவர்களில் ஒருவர். இவர் இளைஞராய் இருக்கும் போது கம்யுனிசக்கொள்கையால் ஈர்க்கப்பட்டு பல போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார், அவரின் தீவிர தமிழ் உணர்வால் தமிழ் தேசியத் தலைவர் மற்றும் அண்ணன் சீமானின் தமிழ் தேசிய பாதை அவரை ஈர்த்தது. அய்யா 85 அகவையை கடந்தாலும் நெஞ்சுறுதியுடன் நாம் தமிழரின் அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்துகொண்டவர்.



0 Responses to நாம் தமிழர் திருச்சிராப்பள்ளி மாவட்ட மூத்த உறுப்பினர் அய்யா பழனியாண்டி மறைவு (படங்கள் இணைப்பு)