குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு பிரிட்டனிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இலங்கை அரசாங்கம் போர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்துவதற்கு போதியளவு ஆதாரங்களை சமர்பிக்குமாறு பிரிட்டனிடம் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் நிஹால் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்துவதனை விடுத்து ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் முயற்சிகளின் போது இலங்கை போர்க் குற்றங்களில் ஈடுபட்டதா என்பதனை கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டால் அதற்கு பதிலளிக்கத் தயார் என உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.



0 Responses to போர் குற்றச்சாட்டுக்களுக்காக ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு பிரிட்டனிடம் இலங்கை கோரிக்கை