வலிகாமம் பிரதேசத்தின் தெல்லிப்பழைப்பகுதியில் குடியமர்த்தப்பட்ட மக்கள் மீது புதிய கட்டுப்பாடுகளை சிறீலங்கா படையினர் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில் யாழ் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தெல்லிப்பழை பகுதியில் குடியமர்த்தப்பட்ட இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தமது பதிவுகளை மேற்கொள்ளவேண்டும் என யாழ் அரச அதிபரிடம் சிறீலங்கா படையினர் தெரிவித்துள்ளனர்.
campமுன்னர் தமது விபரங்களை இந்த மக்கள் வழங்கியிருந்தாலும் அவர்கள் மீண்டும் தமது பதிவுகளை எதிர்வரும் 19 ஆம் நாளுக்கு முன்னர் வழங்கவேண்டும் என படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த மக்களுக்கு உதவிகளை வழங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களும் தமது விபரங்களை பதிவுசெய்யவேண்டும் எனவும், இந்த மக்களுக்கு உதவிகளை வழங்கும் அரச நிறுவனங்கள் கூட அதன் அதிகாரிகளின் விபரங்களையும், வாகனத்தின் விபரத்தையும் பதிவு செய்யவேண்டும் என படையினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, யாழில் உயர்பாதுகாப்பு வலையம் என்பது இல்லை எனவும், கண்ணிவெடிகள் காணப்படுவதால் அங்கு குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் யாழ் அரச அதிபர் தொடர்ந்து தெரிவித்து வருவதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to யாழ். தெல்லிப்பழை பகுதியில் குடியமர்த்தப்பட்ட மக்கள் மீது புதிய கெடுபிடிகள்