சண்டிலிப்பாயின் வடக்கே அழகும் செழிப்பும் மிக்க ஒரு சிறிய கிராமமே ஆலங்குலாய் ஆகும். பல போராட்ட வடுக்களைச் சுமந்து நிற்கும் இக் கிராமம், முன்னேறிப்பாய்சல் காலப்பகுதியில் பாரிய சேதங்களை தாங்கியும் அழிந்து விடாமல் நிமிர்ந்து நிற்கிறது என்று சொன்னால் அதற்குக் காரணமானவர்கள் அந்தக் கிராமத்தில் இருக்கின்ற ஊர்ப்பற்று மிக்க இளைஞர்களும், மக்களும் தான் என்று சொல்லலாம்.
அவர்களின் ஒருங்கிணைப்பு மையமாக திகழ்வதும், ஆண்டாண்டு காலமாக தலை முறைகளாக கட்டிக்காத்து வரப்பட்டது இந்த நூலகம் தான்.
புலம் பெயர் தமிழர்களின் உதவியாலும் மற்றும், குழந்தைகளுக்கான மாதாந்த மருந்துவ முகாம், மரணச்சடங்கிற்கான தள்ளுவண்டில் சேவை என இது தற்போது சிறிது சிறிதாக முன்னேறி வரும் நிலையில் கடந்த 16.11.2010 ம் திகதி இரவு 11.30 மணியளவில் இனம் தெரியாத நபர்களினால் நூலகம் தீயூட்டப்பட்டும், கல் இருக்கைகள் உடைக்கப்பட்டும் நாசகார வேலை நடந்தேறியுள்ளது.
தமது சொந்த மக்களின் சொத்துக்களையே இவ்வாறு நாசம் செய்வது யார் என்ற் கேள்வி அந்த ஊர் மக்களிடம் மேலோங்கியுள்ளதோடு, பெரும் பீதியும் ஏற்பட்டுள்ளது.
மிகவும் அமைதியாக வாழ்ந்துவரும் இக் கிராம மக்களிடையே வேண்டுமென்றே கலகத்தை மூட்ட இவ்வாறான செயல்பாடுகள் நடைபெற்று வருவதாக ஊர் மக்கள் விசனம் தெரிவித்தனர்.







0 Responses to சண்டிலிப்பாயில் சனசமூக நிலையம் ஒன்று விசமிகளால் தீயூட்டப்பட்டுள்ளது (படங்கள் இணைப்பு)